ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் வழங்கிய இலவச மருத்துவ சேவையின் மூலமாக விவசாய கூலி தொழிலாளிகள், மலைவாழ் மக்கள், பெண்கள் உட்பட 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக, ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் பல ஆண்டுகளாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
நலவாழ்வுத் திட்டம் (Health Scheme)
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இக்கரைப்போளூவாம்பட்டி, நரசீபுரம், தேவராயபுரம், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமப் பஞ்சாயத்துக்களில் ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நலவாழ்வு திட்டம் என்ற பெயரில் ஒரு மருத்துவ திட்டத்தை 2017-ம் ஆண்டு தொடங்கியது.
திட்டத்தின் நோக்கம் (Scheme`s Concept)
சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
குறிப்பாக, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அந்நோயில் இருந்து மீட்டெடுப்பது பிரதான பணியாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஈஷா தன்னார்வலர்களின் உதவியுடன் 49 கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்த சோகை கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 654 பேருக்கு ரத்த சோகை இருப்பதிகண்டுபடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த பாரம்பரிய மருந்துகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் களப்பணியின் விளைவாக, 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
அதாவது, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 75 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
ரத்த சோகை தவிர்த்து காய்ச்சல், தலைவலி, கை, கால் மற்றும் மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சினைகள், வயிறு தொடர்பான கோளாறுகள் போன்றவற்றை தீர்ப்பதற்காக 20 கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ’ஆயுஷ் சேவக்’ என்ற பெயரில் ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டார். அவர் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு ஏற்ப பாரம்பரிய மருந்துகளை வழங்குவார். இப்பணியின் மூலம் சுமார் 22 ஆயிரம் பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்விக்கண் திறக்கும் ஈஷா!
தமிழகத்தில் 1.16 லட்சம் மரங்களை நடும் பணி- காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்பாடு!