1. செய்திகள்

பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்விக்கண் திறக்கும் ஈஷா!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Isha is a silent multi-year service that opens the eyes of education to tribal children!

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். அந்த எழுத்தறிவை பெற ஒருவர் விளம்பரமின்றி உதவுகிறார் என்றால் அவரும் இறைவன்தானே. அப்படி கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அளிக்கும் சேவையை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா அறக்கட்டளை.

கல்விச்சேவையில் ஈஷா (Educative Service)

மலைவாழ் பழங்குடியின மக்கள் பொருளாதாரம் உட்பட பல விதங்களில் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். போக்குவரத்து வசதி கூட இல்லாத தொலைதூர கிராமங்களில் வாழும் அவர்கள் கூலி வேலை செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சத்குரு அவர்களின் ஆலோசனையின்படி, ஈஷா அறக்கட்டளை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மடக்காடு, தாணிக்கண்டி, முட்டத்துயல், முள்ளாங்காடு, சீங்கப்பதி, நல்லூர்வயல்பதி உட்பட 15-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் வாழும் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் ஈஷா அறக்கட்டளை உதவிபுரிந்து வருகிறது.

3 விதங்கள் (3 varieties)

பள்ளி படிப்பை பொறுத்தவரை 3 விதங்களில் அவர்கள் பயன்பெறுகின்றனர்.

  1. கோவை சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் பழங்குடியின குழந்தைகளுக்கு முழு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

  2. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.ஈஷாவின் சொந்த வாகனங்கள் மூலம் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கும் பள்ளியில் இருந்து வீட்டிற்கும் பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

  3. பெற்றோரை இழந்த குழந்தைகள் கோவையின் நகர்புற பகுதியில் உள்ள தனியார் உண்டு, உறைவிட பள்ளியில் தங்கி படிப்பதற்கும் உதவிகள் செய்யப்படுகின்றன.

பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், நர்சிங், டிப்ளமோ போன்ற கல்லூரி படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து கொடுக்கிறது.

கல்லூரி கட்டணம், புத்தகங்கள் வாங்கும் செலவு, போக்குவரத்து வசதி என அனைத்தையும் ஈஷா ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் வார இறுதி நாட்களில் ஆங்கிலம் மற்றும் கணினி சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

இதன் விளைவாக, கடந்த 2017முதல் 2020- வரையிலான கல்வியாண்டில் ஈஷாவின் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்த 8 மாணவிகள், 2 மாணவர்கள் உட்பட 10 பேருக்கு படிப்பு முடித்தவுடன் நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.

பல ஆண்டுகளாக சத்தமின்றி நடந்து வரும் ஈஷா அறக்கட்டளையின் இந்த உதவியால் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக, பெண் குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

மேலும் படிக்க...

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி கொள்முதல் - அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு !

பூச்சிகளை விரட்டியடிக்கும் தாவரப் பூச்சிக்கொல்லிகள் - தயாரிக்கலாம் வாங்க!

English Summary: Isha is a silent multi-year service that opens the eyes of education to tribal children!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.