இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. வரும் 31-ம் தேதியில் இருந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் திரும்ப பெறப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும்,இலவச ரேஷன் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்துக்
கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப்பெறும். இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் அடுத்த 4 மாதங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022, மார்ச் வரை இது அமலில் இருக்கும்.
இந்நிலையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார். மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...