கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதி (Election promise)
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்து.இது கடன் வாங்கிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல்வர் அறிவிப்பு (CM announcement)
இந்நிலையில், தி.மு.க., அரசின் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.,13) அறிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது:
-
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
-
அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.
-
தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக கடந்த ஒருமாத காலமாக 51 விதமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
-
ஆய்வுகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி செலவாகும் எனத் தெரியவந்துள்ளது.
-
நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கூட்டுறவு வங்கி (Cooperative Bank)
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பணம் மற்றும் நகைக்கு மிகவும் பாதுகாப்பான சேவையை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கரும்பு விவசாயிகளுக்கு பெரிய முடிவு! விலை உயர்வு!
PM Kisan தவணை: மொபைல்-ஆப்பில் விவசாயிகள் பதிவு செய்வது எப்படி?