மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 May, 2022 8:40 PM IST

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்தியை அறிவித்துள்ளது.
இதன்படி நகைக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நகைக்கடன்

கல்வி, மருத்துவம் போன்ற இக்கட்டான நேரங்களில், பணத்தைப் புரட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அப்படி, அவசர தேவைகளுக்கு உடனடியாக பணத்தை புரட்டுவதற்கு நகைக் கடன்கள் சிறந்த சாய்ஸ். ஏனெனில், நகைக் கடன் பெறுவதற்கு உங்களிடம் நகை இருந்தால் மட்டும் போதும். நகை தவிர பிணை, செக்யூரிட்டி, கிரெடிட் ஸ்கோர் போன்ற எதுவுமே தேவையில்லை.

வட்டி கம்மி

மேலும், நகைக் கடன்களுக்கு வழக்கமாக குறைவான வட்டியே விதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், நகைக் கடன்கள் வேகமாக பிராசஸிங் செய்யப்பட்டு விரைவில் பணம் கைக்கு வந்துவிடும். இந்நிலையில், எஸ்பிஐ வங்கி (SBI) சிறப்பு சலுகைகளுடன் நகைக் கடன் வழங்குகிறது.
தற்போது எஸ்பிஐ வங்கி நகைக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தில் (Processing Fee) 50% தள்ளுபடி வழங்குகிறது.

மேலும், எஸ்பிஐ யோனோ ஆப் (SBI YONO App) வாயிலாக மிக எளிதாக நகைக் கடனுக்கு விண்ணப்பித்துவிடலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்சமாக 20,000 ரூபாயும், அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஃபிளக்சிபிள் ஆப்ஷன்கள் உள்ளன. கடன் தொகையில் 0.25% பிராசஸிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தங்கத்தின் தரம்

குறைந்தபட்சமாக 250 ரூபாய் ஜிஎஸ்டியுடன் பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், அப்ரைசர் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். கடன் விண்ணப்பதாரர்கள் தங்கள் நகையை வங்கியில் கொடுத்து தரம் மற்றும் அளவை பரிசோதித்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: Jewelry loan discounts - good news!
Published on: 29 May 2022, 08:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now