News

Monday, 27 June 2022 06:51 AM , by: Elavarse Sivakumar

விதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனைத் திரும்ப வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு உடனடியாக செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021 மார்ச் 31 வரை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

37,984 பேர்

அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருந்தனர்.இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விதிகளை மீறி தள்ளுபடி பெற்றவர்களின் நகைக்கடன்களை திரும்ப வசூலிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரூ.160 கோடி

அதன் அடிப்படையில் 37,984 பேரின் நகைக்கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.160 கோடி பறிமுதல் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகுதியற்ற பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்வதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

1 ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000 - வாங்க நீங்க ரெடியா?

ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ்- அசத்தல்அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)