1. Blogs

செல்லாதக் காசைக் கொடுத்துக் கார் வாங்கிய தமிழன்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tamil who bought a car by giving invalid money!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்னும் 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரியக் கடை முதலாளிகள் வரை மறுக்கிறார்கள். இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்தும், அதனை ஏற்க ஏனோ மறுக்கின்றனர்.

புதிய முயற்சி

ஆனால், செல்லாது என சொல்லப்பட்ட 10 ரூபாய் நாணயங்களைச் சேர்த்து, இந்த நாணயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்திருக்கிறார் இந்த தமிழன்.

இணையத்தில் வைரல்

சிறுக சிறுக சேமித்து வைத்த ஆறு லட்சம் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களை வைத்து பல இலட்ச மதிப்பில் கார் வாங்கிய சாதனைத் தமிழன். இவரது இந்த செயல் இன்டர்நெட் முழுக்க தற்சமயம் வைரலாகி வருகிறது.இதற்காக, 10 ரூபாய் நாணயங்களை மட்டும் சேர்த்து வைத்து 6 லட்சம் ரூபாயைச் சேமித்திருகிறார் இவர்.

தருமபுரி மாவட்டத்தின் அரூரை சேர்ந்த வெற்றிவேல் என்னும் இந்தத் தமிழர், அங்குள்ள கார் டீலர் ஒருவரிடம் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து ஒரு காரை வாங்கியுள்ள சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கடை

வெற்றிவேலின் தாயார் ஒரு சிறு கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் யாரும் சில்லறையாக பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்தால் வாங்க மறுத்துள்ளனர். இதனால் அதிகமான பத்து ரூபாய் நாணயங்கள் வெளியே செல்லாமல் கடையிலேயே தங்கியுள்ளது‌. போக போக அந்த காசுகளை வைத்து பக்கத்து வீட்டு சிறுவர்கள் விளையாட ஆரம்பித்துள்ளனர். மேலும் ஒரு சில வங்கிகளும் இந்த காசை வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த அவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். படிப்படியாக அந்த சேமிப்பு ஆறு லட்சத்தை எட்டியுள்ளது. அதை வைத்து ஒரு கார் வாங்க முடிவு செய்த வெற்றிவேல் ஒரு கார் ஷோரூமை அனுகியுள்ளார்.

ஹீரோ

ஆனால் முதலில் கார் ஷோரூமில் இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து உள்ளனர். அதன் பிறகு இவரது முயற்சியை எண்ணி பார்த்து அதற்கு ஒப்புக்கொண்டனர். செல்லாத காசு என்று நம்பப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு ஆறு லட்சத்தில் கார் வாங்கிய‌ சம்பவம் வெற்றிவேலை இணையதள  ஹீரோவாக மாற்றியுள்ளது.

மேலும் படிக்க...

English Summary: Tamil who bought a car by giving invalid money! Published on: 20 June 2022, 10:15 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.