விவசாயம் அல்லது அது சார்ந்த துறையில் நீங்கள் அரசு வேலை தேடுகிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) நிர்வாக இயக்குநர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்க வேண்டும்.
NDDB 2022: வேலை விவரங்கள்
வேலைவாய்ப்பு வகை:முழு நேரம்
பணியிடம்: குஜராத்
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் வேளாண்மை/ பால் தொழில்நுட்பம்/ கால்நடை அறிவியல்/ அடிப்படை அறிவியல்/ பொறியியல்/ பொருளாதாரம்/ வணிகம்/ மேலாண்மைப் பின்னணியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, விண்ணப்பதாரர் முதுநிலைப் பிரிவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
கணக்கியல், கொள்முதல் நடைமுறைகள் & வரிச் சட்டங்கள் பற்றிய தகவல்கள் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை சம்பளம்: நிர்வாக இயக்குநரின் அடிப்படை சம்பளம் பே மேட்ரிக்ஸ் 15ல் இருக்கும், குறைந்தபட்ச அடிப்படை ரூ. மாதம் 1,82,200. NDDBயின் விதிகளின்படி பிற சலுகைகள் செலுத்தப்படும்.
தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு அல்லது தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
NDDB 2022: எப்படி விண்ணப்பிப்பது: ஆர்வமுள்ளவர்கள் 29 ஏப்ரல் 2022க்குள் recruit_ed@nddb.coop என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புதுப்பிக்கப்பட்ட பயோ-டேட்டா/CVயைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியப் பொறுப்புகள்: நிறுவனத் திட்டத்தைத் தயாரித்தல், வழிகாட்டுதல், முன்முயற்சிகளைச் செயல்படுத்துதல், வரவு செலவுத் திட்டம் மற்றும் கண்காணிப்பு, மாநில கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்புகள் / பால் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் கடன்களுக்கான கடன் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல், கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு மூலோபாய ஆதரவை வழங்குவதல் ஆகியன ஆகும்
பல்வேறு வகையான தணிக்கைகளை ஒருங்கிணைத்தல், கணக்குகளை இறுதி செய்தல், கொள்முதல் முறைகள் மற்றும் நடைமுறைகளை மதிப்பீடு செய்தல், நிதி மதிப்பீடு, பத்திரமாக்கல், கடன் ஆவணங்கள், கடன் வாங்குபவர்களின் மதிப்பீடு, நிதி அனுமதி/விநியோகம் மற்றும் கடன் வாங்குபவர்களின் நிதி செயல்திறனைக் கண்காணித்தல் ஆகியவை மற்ற பணிகளில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு NDDB யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
மேலும் படிக்க
அரசாங்க வேலைகளில் 26904 காலியிடங்கள்: 10வது 12வது தேர்ச்சி போதும்!
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் HRA-வை அதிகரிக்க மத்திய அரசு முடிவு? விவரங்கள் உள்ளே!