News

Wednesday, 13 July 2022 04:25 PM , by: Deiva Bindhiya

July 17 Free Sample Exam for Group 4: Applications welcome

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 4 தேர்வு வரும் 24.07.2022 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வா்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளிவிளலான இலவச குரூப் 4 மாதிரி தேர்வு வரும் 17.07.2022 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 09.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வா்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnjobfair.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை 15.07.2022 அன்று மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும் படிக்க: குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முழு மானியத்துடன் உரம்!

தேவையானவை:

  • தங்களது TNPSC குரூப் 4 விண்ணப்ப படிவத்தின் நகல்,
  • TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்படும் ஹால் டிக்கெட் நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ,
  • கருப்பு பால்பேன்

ஆகியவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குரூப் 4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

இன்றைய மொத்த சந்தை காய்கறி விலை நிலவரம்! அறிந்திடுங்கள்

தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)