12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர்கல்விக்கு உறுதுணையாக நின்று வழிகாட்டும் வகையில் அமைகின்ற "கல்லூரி கனவு" நிகழ்ச்சியைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்டந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான தகவலை இப்பகுதியில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், சென்ற திங்கட்கிழமை வெளியாகிய நிலையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
இந்த நிலையில், தமிழக அரசு ஏற்கனவே தொடங்கியுள்ள "நான் முதல்வன்" திட்டத்தின் அடிப்படையில், 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது, அரசு. இந்த நிகழ்ச்சியைச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
மேல்நிலைப் பள்ளிகளில் படித்துச் தேர்ச்சி அடைந்த மாணவ - மாணவிகள் தங்களுக்கு உயர்கல்விக்கு உள்ள வாய்ப்பு குறித்துப் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்ற பிரிவு வாரியாக அனைவரும் அறியச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். அதோடு, கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் முதலான கருத்துக்களைப் புகழ்பெற்ற வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாக இத்திட்டம் குறித்துத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!
இந்த நிகழ்ச்சிக்காக, உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் ஆகியவை சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், HCL நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்த 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளை தகுதியின் அடிப்படையில் ஹெச்.சி.எல்., நிறுவனம் தேர்வுசெய்து, பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்க இந்த ஒப்பந்தம் நடைபெற உள்ளது. அதோடு, பயிற்சிக்கான செலவை அரசு ஏற்பதுடன், பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த விழாவில், சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, மாவட்ட வாரியாக, வரும் 29, 30 அடுத்த மாதம் 1 மற்றும் 2-ம் தேதிகளில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கின்றது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க