கரூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
கரூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் அதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கரூர் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கரூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க நிர்வாக குழு மாவட்ட தலைவர் சக்தி ஜெயச்சந்திரன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பல நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.
மேலும் படிக்க
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!