News

Sunday, 02 August 2020 01:57 PM , by: Daisy Rose Mary

பட்டு முகக்கவசங்கள் கொண்ட பரிசுப்பொட்டியை காதி கிராமத்தொழில் ஆணையம் தயாரித்துள்ளது இதனை மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின்கட்காரி நேற்று அறிமுகம் செய்தார்.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை (Khadi gift box of silk masks) இப்போது உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். ஒரு பரிசுப் பெட்டியில் பல்வேறு வண்ணங்கள், அச்சுக்களுடன் கூடிய கைவேலைப்பாடு கொண்ட 4 பட்டு முகக் கவசங்கள் இருக்கும். கருப்பு வண்ணத்தில், பொன்னிறத்தில் அச்சிடப்பட்ட, கைகளால் தயாரிக்கப்பட்ட கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காகிதப் பெட்டிக்குள் இந்த முகக் கவசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேசமயம், விழாக்கால உணர்வைக் கொண்டாடும் வகையிலான தகுந்த ஒரு பொருளாக இந்தப் பரிசுப்பெட்டி உள்ளது என்று அமைச்சர் நிதின்கட்காரி பாராட்டினார். காதி கிராமத்தொழில் ஆணையம் மேற்கொண்ட முகக்கவசத் தயாரிப்பு முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்த அவர், கொரோனா பெருந்தொற்று நிலவும் கடினமான காலத்தில், கலைஞர்களுக்கு, தொடர்ந்து வாழ்வாதாரம் கிடைக்க இது வகை செய்கிறது என்றும் குறிப்பிட்டார் 

இந்த பரிசுப் பெட்டியை வெளிநாடுகளில் விற்பனை செய்யலாம் என்ற எண்ணமே, இந்த பரிசுப் பெட்டியை அறிமுகப்படுத்தியதற்கான காரணம் என்று காதி கிராமத் தொழில்துறை ஆணையத்தின் தலைவர் திரு.வினய்குமார் சக்சேனா கூறினார். விழாக்காலத்தின் போது, தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு நியாயமான விலையிலான பரிசுப்பொருள்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம், இந்திய மக்களிடையே பலருக்கும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

அச்சிடப்பட்ட பட்டு முகக்கவசம் ஒன்றும், கவர்ச்சிகரமான கண்கவர் வண்ணங்களில் மூன்று பட்டு முகக்கவசங்களும் பரிசுப்பெட்டியில் இருக்கும். மூன்று அடுக்குகள் கொண்ட இந்தப் பட்டு முகக் கவசங்கள், தோலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், துவைக்கக் கூடியதாகவும், மறு பயன்பாடு கொண்டதாகவும், தானாகவே மக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இந்த முகக் கவசங்களில் மூன்று மடிப்புகள் உள்ளன.

காதுகளில் பொருத்திக் கொள்வதற்கு வசதியாக, காதுகளுக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளக்கூடிய கண்ணிகளைக் கொண்டவை. அழகான மணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த முகக்கவசங்களில் 100 சதவீதம் காதி பருத்தி துணி கொண்ட இரண்டு உள் அடுக்குகளும், பட்டுத்துணியால் அழகுற செய்யப்பட்டுள்ள மேலடுக்கு ஒன்றும் இருக்கும். பட்டு முகக்கவசங்கள் கொண்ட இந்த பரிசுப்பெட்டியின் விலை 500 ரூபாய். 

மேலும் படிக்க...

மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!

முள்ளங்கிக்கு விலை கிடைக்கவில்லை- சாலையில் கொட்டப்படும் அவலம்!

வேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)