தென்னிந்தியாவின் அனந்தபூர் முதல் டெல்லி வரை இந்திய ரயில்வே (Indian Railways) கிசான் ரயிலை இயக்கியுள்ளது. தென்னிந்தியாவின் முதல் கிசான் ரயிலான இந்த ரயில் மூலம் 322 டன் பழங்கள் குறைந்த நேரத்தில் தலைநகரை அடைந்தன.
சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இழப்புக்களைக் குறைக்கும் வகையில் கிசான் ரயில் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில் இருந்து, தென்னிந்தியாவின் முதல் கிசான் ரயில் செப்டம்பர் 9ம்தேதி டெல்லி நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதனை மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தென்னிந்தியாவின் முதல் ரயில் (First train)
இதில் ஆந்திராவின் புகழ்பெற்ற ஆஸாத்பூர் சந்தையில் (Azadpur Mandi )இருந்து 322 டன் பழங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதற்கு முன்பு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால், அறுவடைக்கு பிந்தைய இழப்பாக 25 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டது. அதாவது ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த இழப்பு கிசான் ரயில் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தங்கள் பொருட்களை காலம்தாழ்த்தாமல் விற்பனை செய்வதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.400 கோடி விவசாயிகள் வருவாய் ஈட்ட முடியும்.
பயனாளிகள் (Benefisery)
இந்த கிசான் ரயில் இயங்குவதால், ஆந்திராவின் தோட்டக்கலைப் பயிர்களான மாதுளை, முலாம்பழம், பப்பாளி, கொய்யா, தக்காளி மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகளின் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். அவர்களின் விளைபொருட்கள் டெல்லியின் சந்தைகளை நேரடியாக அடைய முடியும். மேலும் நல்ல விலையும் கிடைக்கும். விவசாயிகளுடன் வணிகர்களும் இந்த ரயிலை இயக்குவதால் பயனடைவார்கள். அவர்கள் தங்கள் பொருட்களை டெல்லியின் சந்தைகளுக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும்.
ஒருபுறம், கிசான் ரெயிலைப் பொறுத்தவரை, புதிய சந்தைகளுக்கு விளைபொருட்களைக் கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
கிசான் ரயிலின் நன்மைகள் (Benefits)
சாலையுடன் ஒப்பிடும்போது, கிசான் ரயில் வழியாக பொருட்களை அனுப்பும்போது இழப்பு குறைவாக இருக்கும். ரயில் வேகனில் சாமான்கள் மிகவும் கவனமாகக் கையாளப்படுகின்றன. இந்த ரயில் மூலம் பொருட்களை அனுப்புவதில் குறைந்த கட்டணத்தில் பொருட்கள் விரைவாகக் சென்றடையும்.
தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த கிசான் ரயிலை இயக்கத் திட்டமிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், தேவை அதிகரிக்குமானால், ஜனவரி மாதம் முதல் அடிக்கடி கிசான் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க...
ரூ.3.50 கோடிக்கு விலை போன செம்மறி ஆடு!! அப்படி என்ன இருக்கு!
மூலிகை அறிவியல் பட்டயப்படிப்பு - உயர்கல்வியைத் தொடர ஒரு சிறந்த வாய்ப்பு!