நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 May, 2023 4:49 PM IST
Krishi Jagran new initiative Wings to Career launched on today

விவசாயத் துறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிரிஷி ஜாக்ரான் நிறுவனம் 'விங்ஸ் டு கேரியர்' (Wings to Career) என்கிற தளத்தை தொடங்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தளத்தின் அடிப்படை நோக்கமானது இளைஞர்கள் தங்கள் எதிர்கால திட்டங்களை விவசாயம் தொடர்பான வணிகத்தை மையப்படுத்தி முன்னேறுவது ஆகும்.

விவசாயம் சார்ந்த தொழில் தளமான 'விங்ஸ் டு கேரியர்' தொடக்க விழா டெல்லியில் உள்ள க்ரிஷி ஜாக்ரன் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த தளத்தில், அனைத்து மாணவர்களும் விவசாயத் துறை சார்ந்து இயங்கும் நிபுணர்களிடம் நேரடியாக ஆலோசனை பெற்று விவசாயம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம். இந்த வாய்ப்பின் மூலம் மாணவர்கள் விவசாயத் துறை சார்ந்து இயங்கும் தொழில் முனைவராகவும் உருவாகுவதற்கு உதவும் என நம்பப்படுகிறது.

நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற டாக்டர் ஆர். C. அகர்வால், (DDG Education ICAR) 'விங்ஸ் டு கேரியர்’ தளத்தினை வெகுவாக பாராட்டியதுடன், விவசாயக் கல்வியின் முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருவதாகவும் கூறினார். மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி மாணவ, மாணவியர் வேளாண் கல்வியினை பயில்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், சிறுவர்கள் முதல் பெண்கள் வரை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விங்ஸ் டு கேரியர் தளம், ஸ்டார்ட் அப் துறையில் பணிபுரியும் மாணவர்களின் போக்கை அதிகரிக்கும் என்றார்.

நிகழ்வில் பங்கேற்ற கார்ப்பரேட் விவகாரங்களின் இயக்குனர் ராஜு கபூர் பேசுகையில், இந்த விங்ஸ் டு கேரியர் தளத்தை ஒரு நல்ல முயற்சி என்று விவரித்தார். இந்த தொழில்நுட்ப யுகத்தில், காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும், இன்றைய விஷயங்கள் நாளை சரியாக இருக்காது என்று அவர் கூறினார். உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாடுகள் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் கூறினார்.

இதன் மூலம் தொழில் துறையிலும் நிறைய மாற்றம் நிகழப் போகிறது. இன்றைய மாணவர்கள் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றார். இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ளது. இதனுடன் விவசாயத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்தும் விரிவாக பேசினார்.

”நமது நாட்டின் இளைஞர்கள் விவசாயத் துறையில் ஸ்டார்ட் அப்களில் அடியெடுத்து வைப்பது அவசியம் எனவும், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, உணவுக் கலப்படம், விவசாயத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சவால்கள் குறித்தும்” டாக்டர் ரமேஷ் மிட்டல் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த தொடக்க நிகழ்ச்சியில் விருந்தினர்களாக டாக்டர் ஆர். சி. அகர்வால் (டிடிஜி கல்வி ஐசிஏஆர்), டாக்டர் எஸ். என். ஜா (DoG பொறியாளர் ICAR), டாக்டர். ரமேஷ் மிட்டல் (இயக்குனர் NIM), டாக்டர். நூதன் கௌஷிக் (அமிட்டி உணவு மற்றும் வேளாண்மை அறக்கட்டளை), ராஜு கபூர் (கார்ப்பரேட் விவகாரங்களின் இயக்குநர்), டாக்டர். ஓம்பிர் எஸ். தியாகி (VP UPL லிமிடெட்), மோரூப் நாம்கில் (IFFCO தலைவர்), சங்கீதா பாண்டே (ஏஐஓஏ இணை ஒருங்கிணைப்பாளர்), கிருஷ்ண சுந்தரி (பேராசிரியர் பயோடெக்னாலஜி ஜேபி), பேராசிரியர் ஸ்வேதா பிரசாத் (இம்பீரியல் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

pic courtesy: krishi jagran

மேலும் காண்க:

cyclone Mocha update: இந்த 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

English Summary: Krishi Jagran new initiative Wings to Career launched on today
Published on: 11 May 2023, 04:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now