1. மற்றவை

TNAU: வேளாண் UG, Diploma படிப்புக்கு மாணவர் சேர்க்கை- முழு விவரம் காண்க

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TNAU Admission for Agriculture UG, Diploma Course

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நேற்று (மே 10) முதல் தொடங்கி உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு கல்வி நிர்வாகங்களும் இணைந்து, நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாணவர் சேர்க்கையினை தொடங்கி உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இப்பகுதியில் வேளாண் பல்கலைகழகம் தொடர்பான மாணவர் சேர்க்கை குறித்த தகவலை காணலாம்.

நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலை.யின் 14 பட்டப்படிப்புகளுக்கும் (UG), 3 பட்டயப்படிப்புகளும் (DIPLOMA), மீன்வளப் பல்கலை.யின் 6 பட்டப்படிப்புகளுக்கும்(UG), 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் (B.voc.programs) ஒருமித்தவாறு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளங்கலை பட்டப்படிப்புகள் (UG) மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரம்

  1. B.Sc.(Hons.) Agriculture -1335
  2. B.Sc.(Hons.) Horticulture- 397
  3. B.Sc.(Hons.) Agriculture (தமிழ்) -50
  4. B.Sc.(Hons.) Horticulture (Tamil medium)- 50
  5. B.Sc.(Hons.) Forestry- 79
  6. B.Sc.(Hons.) food, Nutrition and Dietetics- 67
  7. B.Sc.(Hons.) Sericulture (பட்டு வளர்ப்பு)- 42
  8. B.sc.(Hons.) agri business management- 56
  9. B.Tech. (Agricultural Engineering)- 179
  10. B.Tech.(BioTechnology)-78
  11. B.Tech.(food technology)- 86
  12. B.Tech.(Energy and Environmental Engineering)- 76
  13. B.Tech.(BioInfomatics)- 30
  14. B.Tech.( Agricultural Information Technology)-30

Courses and Number of seats at Affiliated colleges of TNAU

  • B.Sc. (Hons) Agriculture- 2670
  • B.Sc. (Hons) Horticulture- 136

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:

மாணவர்கள் http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ ஆகிய மூன்று பிரிவினருக்கு-ரூ.250-,  மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும்- ரூ.500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:  09.06.2023

டிப்ளமோ சேர்க்கைகள் (2023-2024) குறித்த அறிவிப்பு:

முழு மாணவர் சேர்க்கையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் நாள் தொடங்கப்பட்டதில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: http://tnagfi.ucanapply.com

விண்ணப்பக்கட்டணம்:

BC, BCM, and MBC /DNC பிரிவினருக்கு- Rs.200/-

SC, SCA and ST பிரிவினருக்கு- Rs.100/-

TNAU- கல்லூரியில் டிப்ளமோ பிரிவில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விவரம்:

  • Diploma in Agriculture -250
  • Diploma in Agriculture (Tamil Medium) -80
  • Diploma in Horticulture- 80
  • Diploma in Agricultural Engineering (Agriculture Engineering college and Research institute)-40

TNAU-அரசு சார்பு கல்லூரிகள்(govt-aided):

  • Diploma in Horticulture (Madhavaram) - 50
  • Diploma in Horticulture- (Thally)- 50
  • Diploma in Horticulture- (Dindigul)- 50

Courses and Number of seats at Affiliated colleges of TNAU :

  • Diploma in Agriculture- 520
  • Diploma in Horticulture- 170

மேலும் தகவலுக்கு, தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்களின் விவரம்: 0422-6611345. 0422-6611346, 9488635077, 9486425076 (வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) , மெயில் மூலம் தகவல் தெரிந்துக்கொள்ள ugadmissions@tnau.ac.in என்பதை பயன்படுத்தலாம்.

pic courtesy: TNAU

மேலும் காண்க:

அடி தூள்.. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 % ஊதிய உயர்வு- அமைச்சரின் முழு பேட்டி

English Summary: TNAU Admission for Agriculture UG, Diploma Course Published on: 11 May 2023, 03:10 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.