பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 March, 2023 5:03 PM IST
Krishi Sanyantra Mela 2023 Kickstarts today at odisha

ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் க்ரிஷி சன்யந்தரா மேளா-2023 இன்று தொடங்கியது. இந்த மேளா மூன்று நாள் நிகழ்வாக வருகிற முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்வை ஏற்பாடு கிரிஷி ஜாக்ரானை ஒன்றிய அமைச்சர்கள் வெகுவாக பாராட்டினார்.

ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் இன்று நடைப்பெற்ற க்ரிஷி சன்யந்த்ரா மேளா 2023-வில் ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, பாலாசோர் எம்பி, பிரதாப் சந்திர சாரங்கி, எஸ்பிஐ மேலாளர் (LHO), துருவா சரண் பாலா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொளி வாயிலாக நிகழ்வில் பங்கேற்றார்.

மாநாட்டில் பங்கேற்ற மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மேளாவை ஏற்பாடு செய்ததற்காக கிரிஷி ஜாக்ரனைப் பாராட்டினார். இந்திய அரசின் சார்பில் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டில் விவசாயிகளின் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிவரும் அர்ப்பணிப்பை விரிவாக எடுத்துரைத்தார்.

பிரதமர் கிசான் யோஜனா உட்பட அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை அவர் விளக்கி உரையாற்றினார். இத்திட்டத்தினால் ஏற்கனவே நாடு முழுவதும் 11.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், ஒரிசாவில் உள்ள விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற்று, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோமர் குறிப்பிட்டார். மேலும், விவசாயிகள் கிருஷி சன்யந்த்ரா மேளா மூலம் தங்கள் விவசாய நுட்பங்களை நவீனமயமாக்கி மேம்படுத்துவதன் மூலம் பயனடைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உழவர் பத்திரிகையாளர்கள் என்ற கிரிஷி ஜாக்ரன் முயற்சியை பாராட்டி வாழ்த்தினார்.

இதேப்போல் மாநாட்டின் போது, கிரிஷி ஜாக்ரன் நிறுவனர் எம்.சி.டோமினிக் மற்றும் ஒடிசா விவசாயிகளை பர்ஷோத்தம் ரூபாலா பாராட்டினார். க்ரிஷி ஜாக்ரனின் ‘ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட்முயற்சியின் உதவியுடன் 1200 விவசாயிகள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளதாக ரூபாலா குறிப்பிட்டார். விவசாயிகளுக்கான கிரிஷி ஜாக்ரனின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது மற்றும் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அவசியம் என்றும் தனது உரையில் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு 'விவசாயி பத்திரிகையாளர்' தேவை என்பதை ரூபாலா வலியுறுத்தினார். இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் எடுத்துரைத்தார். அனைத்துக் கொள்கைகளிலும் விவசாயிகளுக்குப் பலன்களை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இந்த முயற்சியில் கிருஷி ஜாக்ரன் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் ரூபாலா கூறினார்.

இந்நிகழ்ச்சியை சாரங்கி உட்பட பலர் பாராட்டினர், அவர்கள் கண்காட்சியை ஏற்பாடு செய்த கிரிஷி ஜாக்ரனின் முயற்சியை வாழ்த்தி பாராட்டினர். பாலசோர் விவசாயிகளுக்கு சாரங்கி தனது நன்றியைத் தெரிவித்ததோடு அவர்களின் விவசாய முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகள் தங்கள் வயல்களில் மண்புழு உரம் பயன்படுத்தவும், இயற்கை விவசாய முறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தினார். விவசாயிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

க்ரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக் பேசுகையில், விவசாயத்தில் புதுமையின் முக்கியத்துவம் மற்றும் புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் 1-ஆம் நாள் விழா இன்று நடைப்பெற்ற நிலையில் அடுத்த 2 நாட்களும் (26,27) விவசாயம் தொடர்பான நிகழ்வுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு கலந்தோலசனை கூட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

சர்வதேச வன நாள் விழா- ஆமை குஞ்சுகளை கையில் ஏந்தி ரசித்த அமைச்சர்

English Summary: Krishi Sanyantra Mela 2023 Kickstarts today at odisha
Published on: 25 March 2023, 05:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now