News

Saturday, 22 July 2023 03:49 PM , by: Muthukrishnan Murugan

Kubota MU 4501 bags Tractor of the Year award in ITOTY 2023

2023 ஆம் ஆண்டிற்கான இந்திய டிராக்டர் ஆஃப் தி இயர் விருது (ITOTY) வெற்றியாளர்களின் பட்டியல் கடந்த வியாழன்கிழமை அன்று புது தில்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது.

விவசாயத்துறை மட்டுமின்றி பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்கும் டிராக்டரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டிராக்டர் ஜங்ஷனின் நிறுவனர் ரஜத் குப்தா, டிராக்டர்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கும் நிகழ்வினை 2019 இல் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தாண்டு நடைப்பெற்ற விழாவில் இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க இந்திய டிராக்டராக 'குபோடா MU 4501' தேர்வு செய்யப்பட்டது.

ITOTY-2023-ல் பல்வேறு விருது பிரிவுகளில் வென்றவர்களின் விவரம் பின்வருமாறு:

  • ஆண்டின் சிறந்த டிராக்டர்- 'குபோடா MU 4501'.
  • ஆண்டின் சிறந்த டிராக்டர் ஏற்றுமதியாளர் - 'சோனாலிகா இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட்'.
  • ஆண்டின் சிறந்த டிராக்டர் உற்பத்தியாளர் விருது - 'மஹிந்திரா டிராக்டர்'.
  • The Orchard Tractor of the Year - 'குபோடா பி2441' ஆகும்.
  • The Orchard Tractor of the 2nd Year winner - 'ஃபோர்ஸ் ஆர்ச்சர்ட் 4X4' ஆகும்.
  • வேளாண்மைக்கான சிறந்த டிராக்டர்- 'நியூ ஹாலண்ட் 3630 TX சூப்பர் பிளஸ்'
  • டிராக்டர் ஆஃப் கமர்ஷியல் அப்ளிகேஷன்- 'மஹிந்திரா அர்ஜுன் 555DI'
  • இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிராக்டரில் சிறந்தது- 'ஐச்சர் ப்ரைமா ஜி3 ரேஞ்ச் ஆஃப் டிராக்டர்கள்'.
  • சிறந்த வடிவமைப்புக்கான டிராக்டர் விருது- 'யான்மார் ஒய்எம் 348 ஏ 4டபிள்யூடி'.
  • இந்தாண்டின் சிறந்த 4WD (ஃபோர் வீல் டிரைவ்) டிராக்டர்- 'Farmtrac 45 Ultramaxx'
  • இந்த ஆண்டின் நிலையான டிராக்டர் (Sustainable Tractor) - 'ஸ்வராஜ் 744 XT'
  • இந்தாண்டின் சிறந்த கிளாசிக் டிராக்டர் (Classic Tractor of the Year)- 'மாஸ்ஸி பெர்குசன் 1035 டிஐ'.
  • நிதிச்சிக்கல் தீர்வுக்கான புதுமையான டிராக்டர்- 'TVS கிரெடிட்'
  • மிகவும் நிலையான டிராக்டர் பைனான்சர் - 'மஹிந்திரா ஃபைனான்ஸ்'
  • சிறந்த டிராக்டர் பைனான்சர் - 'சோழமண்டலம் ஃபைனான்ஸ்'.
  • வேகமாக வளரும் டிராக்டர் நிதியாளர் விருது - SK finance.
  • மிகவும் நம்பகமான நிதியாளர் விருது - 'HDFC'.

டிராக்டர் & இம்ப்ளிமென்ட் உற்பத்தி நிறுவனங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவதும், ஊக்குவிப்பதன் நடவடிக்கையாக இவ்விருது வழங்கும் விழா நடைப்பெறுகிறது.

டிராக்டர் துறையில் மிக நீண்ட நெடிய அனுபவமுள்ள வல்லுநர்கள் இக்குழுவின் நடுவர்களாக செயல்பட்டு விருதிற்கான தகுதியான நபர்களை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை டிராக்டர் ஜங்ஷனின் (நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி) ரஜத் குப்தா, தலைமை அமர்வைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

20 மற்றும் 50 ரூபாய்க்கு இப்படி ஒரு சாப்பாடா? தென்னக ரயில்வே அசத்தல்

12 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியத் தொகையினை உயர்த்தியது தமிழ்நாடு அரசு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)