நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(Pradhan mantry awas Yojana) திட்டத்தை செயலுக்கு கொண்டுவருமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியது.
மேலும், இந்தத் திட்டத்தை வேயற்றியடைய செய்யும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தது. உத்தரவின்படி, இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு உத்தரவுயிட்டது.
இதனால், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை நடவடிக்கைக்கு கொன்டு வரும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலர் தலைமையில் குழு அமைத்து ஊர் வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் கோபால் உத்தரவை வழங்கியுளளார்.
குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலரும், உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரும் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு நற்செய்தி! தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு!
முந்தைய அதிமுக அரசின் இலவச ஆடு-மாடு திட்டம் தொடரும்- தமிழக அரசு அறிவிப்பு!