இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,876 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,72,014 ஆனது.
கோவிட் புள்ளி விவரம் (Covid Statistics)
கடந்த 24 மணி நேரத்தில், 1,99,054 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,06,60,202 ஆனது. தற்போது 11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 895 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 169.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,70,053 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
BA.2 வைரஸ் (BA.2 Virus)
ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிஏ3 வேரியண்ட்டும் இதில் வெளிவந்திருக்கிறது. ஒமிக்ரான் வைரசின் 'பிஏ.2' வேரியண்ட் இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவியுள்ளது.
மேலும் படிக்க