கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. பிற மாநிலங்களைப் போலவே, தமிழகத்திலும் ஊரடங்கால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோல் தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது மட்டுமே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும்.ஆகவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற நிலையில் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் என்ற விகிதத்தில் தற்போது வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவையை விட அதிக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய பட்டு வருகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையை விட குறைவான கொரோனா தடுப்பூசிகள் உள்ளது.
எனவே அரசு மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி வழங்குதல் 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு 90 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளுக்கு 10 சதவீதமும் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்று கடிதாதில் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க:
சிபிஎஸ்இ வகுப்பு 12 வாரிய தேர்வு 2021 முடிவுகள்,தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு
பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி!