News

Monday, 12 December 2022 02:39 PM , by: R. Balakrishnan

Heavy rain

தெற்கு கர்நாடக கடற்கரை பகுதிகள் வழியாக தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லும். நாளை தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதுவரும் தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களை சந்தித்து கூறினார்.

மழை (Rain)

அந்தமான் கிழக்குப்பகுதியில் இருந்து நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி நகர்ந்து அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப்பகுதிகளில் நிலவக்கூடும். இதனால் அடுத்த 24 நேரங்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகடலோ மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

கோர தாண்டவமாடிய மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது: இன்றும் கனமழை எச்சரிக்கை!

சோலார் பம்பு செட் அமைக்க 20% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)