1. விவசாய தகவல்கள்

சோலார் பம்பு செட் அமைக்க 20% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Solar pump set - 20% subsidy

தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் (சோலார் பம்பு செட்) திட்டத்தின் கீழ், மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சோலாரில் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2 ஆயிரம் சோலார் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலவச மின் இணைப்பு (Free Electricity connection)

புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நில நீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சோலார் பம்பு செட்டுகளை அமைத்து கொள்ளலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புக்கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை.

இத்திட்டத்தின் கீழ் சோலார் பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, இத்திட்டத்தின் கீழ் சோலார் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மை பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சோலார் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.

20% மானியம் (20% Subsidy)

வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் கான்கிரீட் காரை இடப்படாத கால்வாய்களில் இருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சோலார் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

மானிய விலையில் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் எளம்பலூர், தண்ணீர் பந்தலில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு www.pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

நல்ல லாபம் தரும் கூண்டு முறை கோழி வளர்ப்பு: சில யுக்திகள்!

யூரியா வாங்க ரூ.2700 மானியம்: விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு!

English Summary: 20% subsidy for setting up solar pump sets: Farmers can apply! Published on: 11 December 2022, 06:22 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.