வணிக பயன்பாட்டிற்கான திரவ எரிவாயு (LPG) சிலிண்டரின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டு சாமானியர்கள் மற்றும் வணிகர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி விலை உயர்த்தப்பட்ட பிறகு இது இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எல்பிஜி வணிக எரிவாயு சிலிண்டர் விலை இன்று
இந்த உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2101 ஆக உள்ளது. மும்பையில் எல்பிஜி வர்த்தக சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.2,051. கொல்கத்தாவில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,174.50 ஆக உள்ளது. சென்னையில் எல்பிஜி வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 2,234.50 ஆக உள்ளது.
முன்னதாக நவம்பர் 1ஆம் தேதி எல்பிஜி வணிக சிலிண்டரின் விலை ரூ.266 உயர்த்தப்பட்டு ரூ.2000.50 ஆக இருந்தது. நவம்பர் 1 உயர்வுக்கு முன்பு, தேசிய தலைநகரில் எல்பிஜி வணிக சிலிண்டர் விலை ரூ.1734 ஆக இருந்தது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படவில்லை.
அதேசமயம், மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.899.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.926 ஆகவும், மும்பையில் ரூ.899.50 ஆகவும், சென்னையில் ரூ.915.50 ஆகவும் உள்ளது.
மேலும் படிக்க:
PMUY: இலவச சிலிண்டர் சேவையைப் பெற இதை மட்டும் செய்தால் போதும்!