1. செய்திகள்

உடனடி LPG இணைப்புக்கு புதிய வசதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Enough with the Aadhaar card-instant LPG connection Available!

 

வேறு எந்த ஆவணமும் இன்றி, ஆதார் அட்டை மட்டும் வைத்துக்கொண்டே உங்களால் தற்போது LPG சிலிண்டர் இணைப்பு பெற முடியும். இந்த வசதியை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOC), இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஆதார் அட்டை (Aadhar card)

இதன்படி இணைப்பு பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் வேறு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்து உடனடியாக எல்பிஜி இணைப்பைப் பெற முடியும்.
கேஸ் சிலிண்டரைப் பெற இப்போது ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் நீங்கள் வழங்கத் தேவையில்லை.

முகவரிச் சான்று (Proof of address)

எரிவாயு நிறுவனங்கள் புதிய இணைப்புகள் கொடுக்க பல வகையான ஆவணங்களைக் கேட்கின்றன. குறிப்பாக முகவரிச் சான்று வழங்குவது அவசியம்.

புதிய வசதி (New facility)

பல நகரங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் முகவரிச் சான்று இருப்பதில்லை. இதனால், எல்பிஜி இணைப்பு பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்தகைய சிரமத்தில் இருந்து வாடிக்கையைளர்களை மீட்கும் வகையில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இப்போது எளிதாக சிலிண்டர் கிடைக்கும்.
இந்த புதிய மற்றும் சிறப்பு வசதி குறித்த தகவலை அளித்த இண்டேன், 'ஆதார் எண்ணை (Aadhaar Number) காட்டி யார் வேண்டுமானாலும் புதிய எல்பிஜி இணைப்பைப் பெறலாம். இந்த வாடிக்கையாளர்களுக்கு முதலில் மானியம் இல்லாத இணைப்பு வழங்கப்படும்.

மானியமும் கிடைக்கும் (Grants are also available)

வாடிக்கையாளர் பின்னர் முகவரிச் சான்றினைச் சமர்ப்பிக்கலாம். இந்த சான்று சமர்ப்பிக்கப்பட்டவுடன், சிலிண்டர் மீதான மானியத்தின் பலனும் வழங்கப்படும். அதாவது, ஆதார் மற்றும் முகவரிச் சான்றுடன் இணைக்கப்படும் இணைப்பு, அரசின் மானியத்தின் கீழ் வரும்.

முகவரி ஆதாரம் இல்லா ஒரு வாடிக்கையாளர் விரைவில் எரிவாயு சிலிண்டர் இணைப்பைப் பெற விரும்பினால், அவர் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைப்பைப் பெறுவது எப்படி? (How to get the connection)

 • முதலில் அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டும்.

 • பின்னர் LPG இணைப்பின் படிவத்தை நிரப்பவும்.

 • அதில் ஆதார் விவரங்களைக் கொடுத்து, படிவத்துடன் ஆதார் நகலை இணைக்கவும்.

 • படிவத்தில் உங்கள் வீட்டு முகவரி பற்றிய செல்ஃப் டிக்லரேஷனை (Self declaration) அளிக்கவும்.

 • நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் மற்றும் வீட்டின் எண் என்ன என்பதை அதில் தெரிவிக்க வேண்டும்.

 • இப்படி செய்தவுடன் உங்களுக்கு உடனடியாக எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.

 • இருப்பினும், இந்த இணைப்பின் மூலம் நீங்கள் அரசாங்க மானியத்தின் பலனைப் பெற முடியாது.

 • சிலிண்டரின் முழுத் தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டும்.

 • உங்கள் முகவரிச் சான்று (Address Proof) தயாரானதும், அதை எரிவாயு ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கவும்.

 • இந்த ஆதாரம் உறுதியான ஆதாரமாக இருப்பதால், இதை எரிவாயு நிறுவனம் உங்கள் இணைப்பில் சரியான ஆவணமாகப் பதிவு செய்யும்.

 • இதன் மூலம், உங்கள் மானியம் இல்லாத இணைப்பு மானிய இணைப்பாக மாற்றப்படும்.

 • சிலிண்டரை வாங்கும்போது, ​​முழுத் தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டும்.

 • பின்னர் அரசு சார்பில் உங்கள் வங்கிக் கணக்கில் மானியம் டெபாசிட் செய்யப்படும்.

 • ஆதார் அட்டையுடன் சிலிண்டர் இணைப்பு பெறும் இந்தத் திட்டம் அனைத்து வகையான சிலிண்டர்களுக்கும் பொருந்தும். வணிக சிலிண்டர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

 • இந்த திட்டம் 14.2 கிலோ, 5 கிலோ ஒற்றை, இரட்டை அல்லது கலப்பு சிலிண்டர் இணைப்புகளுக்கானது. இதே விதி FTL அல்லது Free Trade LPG சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.

மேலும் படிக்க...

நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!

PF கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்: இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

English Summary: Enough with the Aadhaar card-instant LPG connection Available!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.