மதுரையில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4000 வரை மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை கூறியுள்ளது. இதில் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தோட்டக்கலைத் துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் விதமாக இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
இது குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், மதுரை மாவட்டத்திற்கு இயற்கை விவசாயத்தை ஊக்கவிக்க 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 மற்றும் காய்கறி பயிர்கள் விவசாயம் செய்ய ரூ.3,800 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகப்பட்சம் 2 ஹெக்டேருக்கு ஊக்கத்தொகை பெறலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்திதை அணுகலாம்..
மேலும் படிக்க...
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைப்பொருள் : விழுப்புரத்தில் வேர்க்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியம்!!