1. செய்திகள்

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைப்பொருள் : விழுப்புரத்தில் வேர்க்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியம்!!

KJ Staff
KJ Staff
Subsidy to Peanut Processing Companies in Viluppuram !!

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் விழுப்புரத்தில் வேர்க்கடலை விளைப்பொருளை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சிறு நிறுவனங்களுக்கான திட்டம்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வேளாண் துறை, பிரதமரால் 2020--21 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட “ஆத்மநிர்பார் பாரத் அபியான்' (Atma Nirbhar Bharat Abhiyan) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுனங்களை வலுப்படுத்தும் விதமாக "பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2020--21ம் ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைப்பொருள் என்ற அணுகுமுறையில் செயல் படுத்தப்படும். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வேர்க்கடலை (Groundnut) விளைப் பொருளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டமானது, மத்திய அமைச்சகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நிதி உதவி விவரங்கள் 

உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவை களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

Read This also
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!

வேர்க்கடலை விளைப்பொருளை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

யாரை அணுகவேண்டும் 

எனவே, மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கி வரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேர்க்கடலை விளைப்பொருளை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதியதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 9443787717, 9443741420 ஆகிய தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Click for More News 

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!

வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

 

English Summary: Subsidy to Groundnut Processing Companies in Viluppuram !!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.