கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்திருப்பதாலும், தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவுப் பெற்றிருப்பதாலும், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று
கொரோனா தொற்று பரவலை தடுக்க உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்படி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றன.அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நெறிமுறைகள்
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அந்நதந்த நாடுகளின் அரசாங்கங்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் விகிதத்தைப் பொறுத்து இந்த உத்தரவுகளை தீவிரப்படுத்தவோ அல்லது தளர்த்தவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
11 மாகாணங்கள்
அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது 11 மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கனெக்டிகட், டெலாவேர், இலினாய்ஸ், மசாசூசெட்ஸ், நிவேடா, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், ஒரீகன், ரோட் ஐலேண்ட் ஆகிய 11 மாகாணங்களில் கட்டாய முகக்கவச உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. அங்கு கணிசமான அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவதைத் தளர்த்திக்கொள்ள மாகாண அரசுகள் முடிவு செய்துள்ளன.
இருப்பினும், மருத்துவமனைகள், உள் அரங்குகள், பள்ளி வளாகங்களில் மேலும் சில நாட்களுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்ததால், பலருக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...