News

Friday, 15 January 2021 04:30 PM , by: Daisy Rose Mary

பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வேளாண் தொழிலில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவை கால் நடைகள். அவ்வகையில் தங்கள் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் உதவும் கால்நடைகளை சிறப்பித்து வழிபாடு செய்யும் விதமாக, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் (Mattu Pongal)

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் களைகட்டி வருகிறது. மாட்டுப் பொங்கலின் போது மாடுகளுக்கு பூ மாலை அணிவித்து, பொட்டு வைத்து அலங்கரித்தும், மூக்கணாங் கயிறு உள்ளிட்ட கயிறுகள் புதிதாக மாற்றிக் கட்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும்.தோட்டங்களில், மாடுகளின் முன் படையல் வைத்து, குடும்பத்தாருடன் வழிபாடு நடத்துவர்.

ஜல்லிக்கட்டு (Jallikattu)

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த போட்டியில் சுமார் 800 காளைகள் பங்கேற்கின்றன. காளைகளின் வயது, எடை, உடல்நிலை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டைக் காண பொது மக்கள் திரளான அளவில் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தக்க பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகமே எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்பு ஆஜராக மாட்டோம்- விவசாயிகள் அதிரடி!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)