டெல்லியில், நேற்று முன்தினம், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்ரல் மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த ஆண்டு கோடையின் தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில், டெல்லியில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது.
அதிகபட்ச வெயில் (High Temperature)
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, வெப்ப அலை வீச்சின் காரணமாக, கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம், அதிகபட்ச வெப்பநிலை, 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் மேல் பதிவானது. இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், நேற்று கூறியதாவது: டில்லியில், ஏப்ரல் மாத துவக்கம் முதல், வெப்ப அலையின் தாக்கத்தால், கோடை வெயில் அதிகரித்து வருகிறது. நேற்று, அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்ஷியசைகடந்துள்ளது. இது, 72 ஆண்டுகளுக்கு பின், ஏப்ரல் முற்பகுதியில் டில்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
வெப்ப அலை தொடரும் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலையின் தாக்கம் நடப்பாண்டில் கடுமையான வெயிலைத் தரும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க