1. செய்திகள்

உலகிற்கு உணவு வழங்க நாங்கள் தயார்: பிரதமர் நரேந்திர மோடி!

R. Balakrishnan
R. Balakrishnan
We are ready to give food to the world: PM Modi

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தானில் பொருளாதார பாதிப்பால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவை காரணமாக உலகமே தகித்துக் கொண்டுள்ளது. இதனிடையே, இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இடையேயான அமைச்சர்கள் மட்ட 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

உலகிற்கு உணவு (Food to the world) 

இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ஆகியோர் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது, உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, உக்ரைன் ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், உலகிற்கு நாளை முதல் உணவு பொருட்கள் விநியோகம் செய்ய தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இன்றைய உலகம் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையை சந்தித்து வருகிறது. யாரும் அவரவர் விரும்பியதை பெறுவதில்லை. அனைத்து வழிகளும் மூடப்படுவதால் பெட்ரோல், எண்ணெய், உரங்களை கொள்முதல் செய்வது கடினமடைகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது முதல் அனைவரும் தங்களிடம் உள்ள பொருட்களை பாதுகாத்து வைக்க நினைக்கின்றனர் என்றார்.

உணவு கையிருப்பு (Food Storage)

உலகம் தற்போது புதிய பிரச்சினையை சந்த்துள்ளது. உலகின் உணவு கையிருப்பு தீர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபருடன் பேசியபோது அவரும் இந்த பிரச்சனை குறித்து பேசியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால் நாளை முதல் உலகிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய இந்தியா தயார் என அவரிடம் தெரிவித்ததாக கூறினார்.

நமது மக்களுக்கு உணவு வழங்க ஏற்கனவே நம்மிடம் போதிய உணவு உள்ளது. ஆனால், நமது விவசாயிகள் உலகிற்கு உணவு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், உலக சட்டவிதிகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க

விவசாயத் திட்டங்களினால் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் மகிழ்ச்சி!

பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் மாணவர்களுக்கு பரிசு: இளைஞர்கள் அசத்தல்!

English Summary: We are ready to give food to the world: Prime Minister Narendra Modi! Published on: 13 April 2022, 06:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.