வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர் உட்பட 22 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)
கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 2.1 கிலோமீட்டர் உயரம் வரை வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
18.04.21 முதல் 19.04.21 வரை
-
இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
20.04.21 முதல் 22.04.21 வரை
-
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு (Temperature forecast)
20.04.21 முதல் 21.04.21 வரை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், க்ளென்மோர்கண், சாம்ராஜ் எஸ்டேட் ஆகியவற்றில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
பகல் வேளைகளில் அதிக வெப்பம் கொளுத்தும் வாய்ப்பு உள்ளதால், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!