தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், அக்டோபர் 10ல் நடைபெற உள்ளது. இதற்கு உதவும் வகையில், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு ஒரே நாளில் 14.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.
தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசிகள்
மூன்று கட்டங்களாக நடந்த தடுப்பூசி முகாம்கள் (Vaccination Camp) வாயிலாக, 70 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 4.50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நான்காம் கட்டதடுப்பூசி முகாம், அக்டோபர் 10ல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து, 14.10 லட்சம் கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசிகள் விமானம் வாயிலாக நேற்று சென்னை வந்தது. இந்த தடுப்பூசிகளை பெற்ற சுகாதார அதிகாரிகள், அவற்றை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க
பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவோம்: பழங்குடியின தம்பதி பிடிவாதம்!
கொரோனா வைரஸ் பரவல் நீண்ட காலம் தொடரும்: உலக சுகாதார அமைப்பு தகவல்!