மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டு இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
இந்த மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதோடு, கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர் இருப்பு வசதி உள்ளதால், ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், அணையின் திறப்பு இன்னும் சில நாட்களுக்கு முன்னே வரலாம் என்று தமிழக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 16 அன்று, அணையின் நீர் இருப்பு சுமார் 70 ஆயிரம் மில்லியன் கன அடி இருந்தது. முந்தைய ஆண்டின் இதே நாளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை 6 மில்லியன் கன அடி குறைவாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தீபகற்பப் பகுதியில் பல பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் என்று கணித்திருப்பதால், மேட்டூர் அணை திறப்பு இன்னும் சில நாட்களுக்கு முன்னே வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாத் தென்மேற்கு பருவமழை ஜூன்-செப்டம்பர் மாதங்களில் தீவிரமாக இருக்கும், இதனால் இப்பகுதியின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீர் அளித்து வரும் நிலையில், மேட்டூர் அணையைச் சில நாட்களுக்கு முன்பே திறந்து விடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க