காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்து இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக இன்று காலையில் மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரின் அளவு வினாடிக்கு 1804 கன அடியிலிருந்து 2267 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியிலிருந்து 103.73 அடியாக உயர்ந்து இருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், ஆற்று நீர் வயல்களுக்கு வந்தவுடன் குறுவை சாகுபடியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் தேதி நெருங்கி வருவதால் தமிழக விவசாயிகள் விதைகள் மற்றும் உரங்களைக் கொள்முதல் செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர்.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு என வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுதைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 69.76 டிஎம்சியாக இருக்கிறது.
இதற்கிடையில், பம்ப் செட் மூலம் ஆற்றல் பெற்ற விவசாயிகள் ஏற்கனவே பருவ சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 24,000 ஹெக்டேரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்த்ககது.
மேலும் படிக்க
TNEA: 2.28 லட்சம் பேர் விண்ணப்பிப்பு! ஜூன் 26-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்!!
காற்றால் பாதிப்படைந்த வாழை மரங்கள்! வாழை விவசாயிகள் குமுறல்!!