மேட்டூர் அணை நீர்வரத்து 126 கன அடியாக குறைந்து இருக்கிறது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணைதான் மேட்டூர் அணை. இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டு இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
இந்த மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதோடு, கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர் இருப்பு வசதி உள்ளதால், ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது.
மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!
மேட்டூர் அணை திறக்கப்பட்ட அன்றிலிருந்து இன்று வரை விவசாயத்திற்கு எனத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. நேற்று காலை வினாடிக்கு 176 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 126 கன அடியாக குறைந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிதாக வெளியாகும் கூட்டுறவு சங்கத்தின் கோ பஜார் செயலி!
நீர் வரத்து குறைந்து வருகின்ற நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 11,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!
அணைக்கு வரும் நீரின் அளவினைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதினால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.10 அடியிலிருந்து 93.32 அடியாக குறைந்து இருக்கிறது.
மேலும் படிக்க:
சதம் அடித்த தக்காளி விலையில் மாற்றம், ரூ. 60க்கு விற்பனை!
வேளாண் வணிக திருவிழா: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு