கடந்த 2020-2021 நிதியாண்டில் சென்னையில் ஆவின் பால் நாளொன்றுக்கு 12.63 லட்சம் விற்பனையானது. தற்பொழுது 2021-2022 நிதியாண்டில் 13.03 லட்சம் லிட்டர் பால் நாளொன்றுக்கு விற்பனையாகிறது எனப் பால்வளத்துறை அறிக்கை கூறுகிறது. இதே நிலை நீடித்தால் வரும் 2022-2023 ஆம் நிதியாண்டில் நாளொன்றுக்குச் சென்னை ஆவின் பால் விற்பனை 15 லட்சம் லிட்டராக உயர வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
ஆவின் பாலின் விலையானது சென்ற ஆண்டில் லிட்டருக்கு ரூ. 3 எனும் விகித்ததில் குறைக்கப்பட்டது. இந்த விலைக்குறைப்பு நடப்பைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆவின் பாலின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த விற்பனை அளவானது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கிய இடம் வகிப்பது பால் ஆகும். இந்த பாலின் விலையில் குறைப்பு என அறிவித்ததை ஒட்டி பாலின் விற்பனை அளவு அதிகரித்துள்ளது. இந்த விலைக் குறைப்பை அடுத்து நாளுக்கு நாள் பாலின் விற்பனை அளவு அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 1.96 லிட்டர் விற்கப்படுகிறது. இந்நிலையில் விற்கப்படுவதால் கூடுதல் தேவையைச் சமாளிக்க, திருப்பூரில் இருந்து பால் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன், கோவை மாவட்ட விவசாயிகளிடமிருந்து ஆண்டு முழுவதும் தடையின்றி பால் கொள்முதல் செய்ய தமிழக அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. மேலும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை முதலான பொருட்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலின் விற்பனை அளவு அதிகரித்து உள்ளதால் பால் விற்பனையாளர்களிடையே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பால் வழங்கும் விவசாயிகளும் பயன் பெற வேண்டும் எனும் நோக்கில் பால் வழங்கும் விவசாயிகளுக்குப் பத்து நாட்களுக்கு ஓருமுறை பணம் வழங்கிட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் வழியாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கொள்முதலுக்கு ஏற்ற பணத்தினைச் சரிவர வழங்க உத்தரவு செய்யப்பட்டுள்ளதை அடுத்துப் பால் கொள்முதலுக்கு வழங்கும் விவசாயிகளுக்கு இச்செய்தி பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது.
மேலும் படிக்க...
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!