வெளியே சென்று தொழில் செய்து வருமானம் ஈட்டுவது ஒருபுறம் என்றால், வீட்டில் அமர்ந்து செய்யக்கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் குறைந்த காலத்தில், காலூன்றி அதிக லாபம் ஈட்டத் துணை நிற்கும் தொழில்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
முக்கியக் காரணிகள் (Key factors)
பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.
பெண்களுக்கான தொழில்கள்
ஊறுகாய் (Pickle
நாவின் சுவைக்கு கட்டுப்படாதவர் எவரும் இலர். அந்த வகையில், நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும், ஊறுகாயை பாரம்பரிய முறைப்படி, சுத்தமாக செய்து விற்பனை செய்யலாம். வீட்டு மணத்துடன் கிடைத்தால், வாங்கி சாப்பிட ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
உணவு (Food)
இதே போன்று, கைமணக்கும் வீட்டு சமையல், காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு சமைத்து விற்பனை செய்யலாம். இதனை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு சேர்த்தால், வாடிக்கையாளர்களைக் கவர்வது மிக மிக எளிது. அதிலும் ஆன்லைனில் வீட்டு சமையல் என்று விளம்பரம் செய்தால், உடனடியாக ஆர்டர்கள் குவிய வாய்ப்பு உள்ளது
இன்ஸ்டண்ட் ஐயிட்டம் (Instant Iteams)
ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தொடங்கலாம். இதற்கு குறைந்த முதலீடு மட்டுமே போதுமானது. உணவு சார்ந்த தொழிலுக்கு ஆன்லைனில் எளிமையாக ஆடர்களையும் பெறலாம்.
துணி வியாபாரம் (Garments)
பெண்களுக்கான புடவை, சுடிதார், ரெடிமேட் டாப், லெகின்ஸ், குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து வந்து, சிறிய கடை போட்டு வியாபாரம் செய்யலாம். உங்கள் கடை பஜாரின் முக்கியமான பகுதியில் இருக்க வேண்டும். இத்துடன், துணி வாங்க வருபவர்களுக்கு, பேஷியல் உள்ளிட்ட அழகு பராமரிப்பு தொடர்பானவற்றை இலவசமாக செய்து தந்தால், வியாபாரம் அமோகமாக இருக்கும்.
மேலும், பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டெய்லரிங் தொழில் செய்யலாம். துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம்.
வீட்டு உபயோக பொருட்கள் (Household appliances)
பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளீனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல்பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.
ஸ்டேசனரி பொருட்கள் (Stationary Items)
பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.
பயிற்சி(Training)
இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது. இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...