பிரபஞ்ச அழகி போட்டியில், அடுத்தாண்டு முதல் திருமணமான பெண்கள், தாய்மார்களும் பங்கேற்கலாமென அழகி போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தாய்குலத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களைப் பொருத்தவரை, தங்களை அழகாகக் காட்டிக்கொள்வதில், அலாதி இன்பம் கிடைக்கும். ஏனெனில், இந்த குணம் இயல்பான ஒன்றாகவே டைக்கப்பட்டிருக்கிறாள் பெண். அந்த வகையில், அழகானப் பெண்களுக்கு மகுடம் சூட்டி, பட்டம் வழங்கும், அழகிப்போட்டி அண்மைகாலமாகப் மிக பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில், 72-வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள் அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது.
விதிகள்
தற்போது வரை பிரபஞ்ச அழகி போட்டியில், திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பெற்றுகொள்ளாத 18 வயது முதல் 28 வயது வரை பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அழகி போட்டியில் பட்டத்தை வெல்ல, திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாகவும், குழந்தை பெற்றுகொள்ளாதவர்களாக இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பிரபஞ்ச அழகி போட்டியில், அடுத்தாண்டு முதல் திருமணமான பெண்கள், தாய்மார்களும் பங்கேற்கலாமென அழகி போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.
போட்டியை நடத்தும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் "பெண்கள் தங்கள் வாழ்க்கையை நிர்வகிக்கும் திறமையை கொண்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகள் அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்க கூடாதென நாங்கள் அனைவரும் நம்புகிறோம்' என தெரிவித்துள்ளது.
வரவேற்பு
2020ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெசா, புதிய அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'நான் உண்மையாக இந்த மாற்றத்தை விரும்புகிறேன். சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை போன்று, முன்பு ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்த தலைமை பதவிகளை இப்போது பெண்களும் ஆக்கிரமிப்பதை போல, இதுவே போட்டியாளர்கள் மாற்ற வேண்டிய நேரமிது. குடும்ப பெண்களுக்கும் பாதையை திறந்துவிட வேண்டிய நேரமிது.
எதிர்ப்பு
சிலர் இந்த மாற்றத்தை எதிர்க்க கூடும். ஏனெனில், அவர்கள் திருமணமாகாத இளம்பெண்களை மட்டுமே விரும்புவராக இருப்பர். வெளிப்புற தோற்றத்தில் இருந்து பெண்கள் எப்போதும் கச்சிதமாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து அணுக முடியாதவர்களாக இருக்க வேண்டுமென விரும்புவர்கள். முந்தைய ஒன்று பாலியல் ரீதியானது. பிந்தைய ஒன்று யதார்த்தம் இல்லாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...