இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணத்தால் இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழகத்தில் பல இடங்களில் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் இலங்கையில் இருந்து தஞ்சம் புகுந்த அகதிகள் வசித்து வருகிறார்கள். இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள், சாலைகள் சேதம் அடைந்திருப்பதாக ஏற்கனவே பல முறை புகார்கள் வந்துள்ளன.
மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்தவும், சீரமைக்கவும் அவர்களுக்கு நல உதவிகளை வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் அடிப்படையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில், இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியும், ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 கோடி ரூபாயும் வழங்கப்படும். கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம்களில் வீடுகள், சாலைகள் மேம்படுத்தப்படும் என்றார்.
இதுமட்டுமல்லாமல், இலங்கை தமிழர்களின் நன்மைக்காகவும், முகாம்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ரூ.6 கோடி என்று ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்று பேசினார்.
மேலும் படிக்க:
தபால் அலுவலக திட்டம்: ரூ. 1,411 மட்டுமே முதலீடு! ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்!