News

Thursday, 07 December 2023 03:32 PM , by: Muthukrishnan Murugan

SML Director at MFOI event

MFOI 2023 நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று SML இயக்குநர் கோமல் ஷா புகன்வாலா பங்கேற்றிருந்த நிலையில், மண்ணின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை விவசாயிகளுக்கு SML கற்றுக்கொடுக்கிறது என தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையிலும் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI விருது வழங்கும் விழாவுடன், வேளாண் கண்காட்சியும் நடைப்பெற்று வருகிறது. இதனிடையே, விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்துள்ளது.

MFOI நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று, 'வளர்ச்சியை அதிகரிப்பதில் பெண்களின் விவசாய பங்களிப்பு' என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  SML Limited இன் (முன்னர் சல்பர் மில்ஸ் லிமிடெட் என அழைக்கப்பட்டது) இயக்குனர் கோமல் ஷா புகன்வாலா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

SML லிமிடெட் 80-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தொடர்புடையது. இந்த அமைப்பின் முதன்மைக் கவனம் விவசாயத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகும். "எங்களிடம் சுமார் 700 தொழில் வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க உழைக்கிறோம்," என்று SML லிமிடெட் இயக்குனர் கோமல் ஷா புகன்வாலா கூறினார்.

விவசாயத் துறையில் உள்ள சவால்கள் என பட்டியலிட தொடங்கிய கோமல் ஷா தெரிவித்த கருத்துகள்: "விவசாயிகளின் முன் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்று பருவநிலை மாற்றம். இரண்டாவதாக, மண்ணின் ஆரோக்கியம். இந்திய மண்ணில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை வறண்டுவிட்டன. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு என்ற மிகப்பெரிய சவாலை நாடு எதிர்கொள்கிறது. இதற்கென 40,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றாலும், 4000 கோடி மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது.

"அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்? வற்றிப் போன மண்" என்று மண்ணின் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலையையும் எழுப்பினார். "அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள், உரங்கள் ஆகியவை மண்ணின் உயிரியல் நிலையைக் கெடுக்கும்" என்று அவர் மேலும் கூறினார். "மண்ணின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை விவசாயிகளுக்கு நாங்கள் கற்பிக்கிறோம். அதனால் சாகுபடி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாது." என நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் அவர் மேலும் கூறியதாவது, "நமது ஆரோக்கியம் நமது பயிருடன் இணைக்கப்பட்டுள்ளது, இருப்பினும், கடந்த 100 ஆண்டுகளில் மண்ணின் ஆரோக்கியம் மிகவும் மோசமாகி விட்டது. SML பெண் விவசாயிகளுடன் இணைந்து மண்ணின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ளவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுக்க முயற்சிக்கிறது" என தனது கருத்துகளை பதிவிட்டார்.

இதையும் காண்க:

நெல் பயிரில் இலைசுருட்டு புழு பிரச்சினையா? இதை பண்ணுங்க

ஒரு ஏக்கருக்கான உற்பத்தி செலவை குறையுங்கள்- MFOI நிகழ்வில் நிதின் கட்காரி உரை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)