1. விவசாய தகவல்கள்

நெல் பயிரில் இலைசுருட்டு புழு பிரச்சினையா? இதை பண்ணுங்க

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
leaf curler problem in paddy crop

அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் 14,800 ஏக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழை மற்றும் மாறுபட்ட இரவு வெப்பநிலை வேறுபாடு காரணமாக சம்பா நெல் பயிரில் இலைசுருட்டு புழு பரவ வாய்ப்புள்ளது.  

எனவே விவசாயிகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து இலைசுருட்டு புழு நெல்லில் பரவாமல் தடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கான அறிகுறி மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு-

தாக்குதலின் அறிகுறிகள்: இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் அதனுள்ளே இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

பொருளாதார சேதநிலை அளவு: பயிர் வளர்ச்சிப் பருவத்தில் 10 சதவிகிதம் இலைச்சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச்சேதம் அல்லது ஒரு நெல் குத்தில் இரண்டு பாதிக்கப்பட்ட இலைகள் தென்படும். இவ்வாறு காணப்படும் பட்சத்தில் ட்ரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு 40,000 என்ற அளவில், நடவு செய்த பின் 37, 44, 51 வது நாட்களில் விடவேண்டும். பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 600 கிராம் அல்லது பிவேரியா பேசியான உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும் அல்லது அசாடிராக்டின் 0.03 சதம் 400 மிலி/ ஏக்கர் தெளிக்க வேண்டும்.

தாக்குதலின் தீவிரம் மிக அதிகமாக தென்படின் உடனடி கட்டுப்பபாட்டிற்கு பின்வரும் பூச்சி மருந்தினை ஒரு முறை பயன்படுத்த வேண்டும். புளுபென்டியமைடு 20 WG 50 கிராம் / ஏக்கர் அல்லது புளுபென்டியமைடு 39.35 W/W SC 20 மிலி / ஏக்கர் அல்லது கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 SP 400 கிராம் / ஏக்கர் அல்லது குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5 SC 60 மிலி / ஏக்கர் அல்லது குளோரான்ட்ரனிலிபுரோல் 0.4 G 4 கிலோ / ஏக்கர் அல்லது பிப்ரோனில் 80 WG 20-25 கிராம் / ஏக்கர் அல்லது இன்டோக்சாகார்ப் 15.8 EC - 80 மிலி / ஏக்கர் அல்லது தயாமீத்தாக்ஸம் 25 WG 40 கிராம் / ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

Read more: இயல்பு நிலைக்கு திரும்பும் KTCC : 4 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரி விடுமுறை

மேற்கண்ட பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நெல் இலை சுருட்டு புழுவினை கட்டுப்படுத்துமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் காண்க:

விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வின் ரோல் மாடலாக மாறும் MFOI

English Summary: Super tips for farmers to deal with leaf curler problem in paddy crop Published on: 05 December 2023, 04:59 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.