தமிழகத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் (Assembly Election)
தமிழகம், புதுவை உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் (Assembly Election) வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
பணம் பறிமுதல் (Seizure of money)
தேர்தல் பறக்கும் படையினரும், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம் இதுவரை லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் (Election Commission) எடுத்து வருகிறது.
தீவிரப் பிரசாரம் (Campaign)
தமிழக சட்டமன்ற தேர்தல் (Assembly Election) வாக்குப்பதிவுக்கான பிரசாரங்கள் மும்முரமாக இருக்கும் நிலையில் நட்சத்திர வேட்பாளர்களும், முக்கியமான தொகுதிகளும் களை கட்டியுள்ளன.
இந்த தேர்தல் பிரசாரத்தில் விதிகளை மீறுபவர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், பல்வேறு முக்கிய உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்திற்கு தகவல் (Information))
சில இடங்களில் சமூக விரோதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவும், வாக்குப்பதிவு நாளன்றும் வாக்காளர்களை மிரட்டிச் செல்வதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் ஆணையம் உத்தரவு (Order of the Election Commission
எனவே, எந்தவொரு இடத்திலும் வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு 72 மணி நேரம் முன்பிருந்து தேர்தல் நாளான 6 ஆம் தேதி வரை மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் செல்லத் தடை செய்யத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவைக் குறிப்பாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!
Election 2021: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!