1. செய்திகள்

Election 2021: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவிவருகிறது.

வேட்புமனுக்கள் பரிசீலினை

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 183 மனுக்கள், பெண்கள் சார்பில் 1,069 மனுக்கள், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை கடந்த 20-ந் தேதி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் ஆகியோர் வேட்பு மனுக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

4 ஆயிரத்து 506 மறுக்கள் ஏற்பு

இந்த வேட்புமனு பரிசிலையின் போது மொத்தம் 4 ஆயிரத்து 506 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 741 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கடைசி நேரத்தில் போட்டியிட விரும்பவில்லை என்று எண்ணும் வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்ப பெற்று கொள்வதற்கு நேற்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பலர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.

4 ஆயிரத்து 220 பேர் போட்டி

இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

முக்கிய கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

  • சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

  • தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

  • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 35 பேர் களத்தில் உள்ளனர்.

  • கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

  • திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் போட்டியிடுகிறார்கள்.

  • விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவருடன் சேர்த்து போட்டியிடும் 29 வேட்பாளர்கள்

English Summary: TN election 2021: 4,220 contestants in 234 constituencies - Final candidate list released !!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.