தமிழக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை அடுத்து இன்று நீர் திறக்கப்பட்டது.
இன்று முதல் 120 நாள்களுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், பாசனத்திற்காக 300 கன அடி நீரும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
அதோடு, முல்லைப் பெரியாறு அணையில் நில நடுக்கம், நில அதிா்வு தொடா்பாக மேலும் 2 கருவிகளைப் பொருத்தும் பணியை செவ்வாய்க்கிழமை தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தொடங்கிய நிலையில் இன்று நீர் திறப்பு நடைபெறுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும் இது ஆகும். இந்த அணையானது தமிழக-கேரள எல்லையில் அமைந்து இருக்கிறது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது எனக் கூறப்படுகிறது.
தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகின்றது. 1893ஆம் ஆண்டில் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி ஆகும்.[1] இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வனச் சரணாலயம் தேக்கடி இருக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்தின் நிலப் பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க