நபார்டு வங்கி எனச் சுருக்கமாக அழைப்படும் வங்கி என்பது விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture & Rural Development (NABARD)) ஆகும். இந்த் அவங்கியின் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நபார்டு வங்கியின் வேலைவாய்ப்பு என்ன? எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்னப்பிக்கலாம்? வயது வரம்பு என்ன? அதன் அதிகார்ப்பூர்வ இணைப்பு எது? முதலான பல தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
பதிவு செய்யும் நாள் : 14 ஜூன் 2022
பதிவு முடியும் நாள் : 30 ஜூன் 2022
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பி.இ., பி.இ- கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/மின்னணுவியல், பி.டெக், ஐடி முதலான பட்டங்களைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதை மிகாமல் இருக்க வேண்டும்.
வேலைகளின் பட்டியல் வருமாறு;
- தலைமை தொழில்நுட்ப அதிகாரி: 1
- மூத்த நிறுவன கட்டிடக் கலைஞர்: 1
- டேட்டாபேஸ் அனலிஸ்ட்-கம்-டிசைனர்: 1
- சொல்யூஷன் ஆர்கிடெக்ட் (Solution Architect ) - மென்பொருள் பிரிவு: 1
- UI/UX டிசைனர் & டெவலப்பர்: 1
- தரவு வடிவமைப்பாளர்: 1
- BI வடிவமைப்பாளர்: 1
- மூத்த மென்பொருள் பொறியாளர்: 2
- QA பொறியாளர்: 1 பதவி
- வணிக ஆய்வாளர்கள்: 2
- விண்ணப்ப ஆய்வாளர்கள்: 2
- வணிக நுண்ணறிவு அறிக்கை டெவலப்பர்: 1
- மென்பொருள் பொறியாளர் (Full Stack Java): 2
- ETL டெவலப்பர்கள்: 2
- Power BI டெவலப்பர்கள்: 2
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
எவ்வளவு சம்பளம்?
தலைமை தொழில்நுட்ப அதிகாரி: ரூ. 45,000
மூத்த நிறுவன கட்டிடக் கலைஞர்: ரூ. 30,000
தீர்வு கட்டிடக் கலைஞர் (Solution Architect): ரூ. 25000
தரவுத்தள ஆய்வாளர் மற்றும் வடிவமைப்பாளர்: ரூ. 15,000
UI/UX டிசைனர் & டெவலப்பர்: ரூ. 20,000
மூத்த மென்பொருள் பொறியாளர்: ரூ 15,000
மென்பொருள் பொறியாளர் (Full Stack Java): ரூ 10,000
மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
விண்ணப்பச் செயல்முறை
இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகுதியான விண்னப்பத்தாரர்கள் நபார்டு வங்கியின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!
பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!