பொதுவாக மீன்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்வது தான் தற்போதைய வழக்கம். இந்தப் பிளாஸ்டிக் பைகளினால், சுற்றுச்சூழல் மிகுந்த பாதிப்படைகிறது. இதனைக் கட்டுப்படுத்த விடை தெரியாமல் வல்லுனர்கள் தத்தளித்து வந்தனர்.
சால்ட் பேக்ஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு:
மீன் சந்தைகள், மிகப் பெரிய அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை (Plastic Wastes) உருவாக்கி வருகின்றன. இதை தடுக்க நியூசிலாந்தைச் சேர்ந்த, 'சால்ட் பேக்ஸ்' (Salt Bags) என்ற நிறுவனம், பூஜ்ஜிய விரயத்தை உண்டாகும் பை ஒன்றை உருவாக்கியுள்ளது.
மிஸ்டி லேடி பைகள்:
'மிஸ்டி லேடி' (Misty Lady) என்ற பெயருள்ள இந்தப் பை, தாவர இடுபொருட்களைக் (Plant Inputs) கொண்டு உருவாக்கப்பட்ட உயிரிப் படலம் மற்றும் பசைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. மீன்களை இந்தப் பைகளில் வைத்து, வெற்றிட முறை மூலம் அடைத்துவிட்டால், குளிர்பதன பெட்டிகளில் பல நாட்களுக்கு மீன்களை பாதுகாக்கும் திறன் கொண்டவை இந்த மிஸ்டி லேடி பைகள். அவற்றை குப்பையில் போட்டாலும், விரைவில் மட்கி, சுவடில்லாமல் மறைந்துபோகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection) அமைப்புகள் இந்த புதிய பைகளை கண்டுபிடித்த சால்ட் பேக்சின் நிறுவனர்களுக்கு அண்மையில் பல விருதுகளை (Awards) வழங்கியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாத இந்தப் பைகள், நிச்சயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!