1. செய்திகள்

பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!

KJ Staff
KJ Staff
Credit : Dinamalar

நம் நாட்டில் சின்ன வெங்காயமானது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி (Yield) செய்யப்படுகிறது.

சின்ன வெங்காய உற்பத்தி குறைவு:

வைகாசி, புரட்டாசி மற்றும் தைப் பட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, சமீப காலமாக கார்த்திகைப் பட்டத்திலும் பயிரிடப்படுவதால், ஆண்டு முழுவதும் சந்தைக்கு வெங்காய வரத்து உள்ளது. இத்தகைய சூழலில் புரட்டாசி / கார்த்திகை பட்டங்களில் பெரம்பலூர், துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயமானது, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக உற்பத்தி (Production) மற்றும் தரம் (Quality) குன்றி காணப்படுகிறது. தொடர்ச்சியான மழை மற்றும் ஏதுவான காலநிலை காரணமாக இந்த தாக்கங்கள் முக்கியமாக, வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில் சுமார் 9,000 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகின்றது என வர்த்தக மூலகங்கள் தெரிவிக்கின்றன.

சந்தை ஆய்வுகள்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் (Center for Agricultural and Rural Development Research) இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் (Price Forecasting Scheme), கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை வரும் காலங்களில், கிலோவிற்கு ரூ.50-க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி - 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி - 0422-6611374

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகளே விதை ஈரப்பதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்!

அனைத்து விதமான வெங்காய ஏற்றுமதிக்கும் ஜனவரி 1 முதல் மத்திய அரசு அனுமதி!

English Summary: Great impact on the price of small onions due to pest / disease attack! Published on: 29 December 2020, 07:35 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.