News

Friday, 01 April 2022 07:53 AM , by: R. Balakrishnan

Natural gas prices double

இயற்கை எரிவாயு விலை இருமடங்கு உயர்வால், உரம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், உரம், சி.என்.ஜி. வாயு, குழாய் வழியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் உற்பத்திக்கு இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இயற்கை எரிவாயு விலையை 6 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அந்தவகையில், ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரையிலான 6 மாதத்துக்கு பெட்ரோலிய அமைச்சகம் நேற்று விலையை கடுமையாக உயர்த்தியது.

இயற்கை எரிவாயு (Natural Gas)

மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 2.90 டாலராக இருந்த அதன் விலையை 6.10 டாலராக உயர்த்தி உள்ளது. அதாவது, இரு மடங்குக்கு மேல் விலை உயர்கிறது. பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான பழைய எண்ணெய் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 6.13 டாலரில் இருந்து 9.92 டாலராக உயர்கிறது.

இந்த விலை உயர்வால், சி.என்.ஜி. எரிவாயு மற்றும் வீடுகளுக்கு குழாய்வழியாக வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை 15 சதவீதம்வரை உயரும் என்று தெரிகிறது. மேலும், மின்சாரம், உரம் ஆகியவற்றின் உற்பத்தி செலவு உயரும். இருப்பினும், மத்திய அரசு மானியம் வழங்குவதால், உரம் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து, இயற்கை எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

ரூ.106ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு!

சூரியனில் அதிகரிக்கும் கரும்புள்ளிகள்: வானியற்பியல் விஞ்ஞானி எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)