1. செய்திகள்

ரூ.106ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
Petrol Price Increases

சென்னையில் இன்று (மார்ச் 30) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.69, டீசல் ரூ.96.76 ஆக உள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் 8 முறை அதிகரித்துள்ளது.

விலை உயர்வு (Price Increased)

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 9 நாட்களுக்கு முன் உயரத் துவங்கியது. சென்னையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் மட்டும், 8 முறை அதிகரிக்கப்பட்டுள்ள பெட்ரோல் ரூ.5.29, டீசல் ரூ.5.33 விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.

மேலும் படிக்க

IRCTC இரயில் டிக்கெட் முன்பதிவு: மாதம் ரூ.80000 சம்பாதிக்கலாம்!

10 ரூபாய்க்கு மீன் விற்கும் வியாபாரி: ஆச்சரியத்தில் மக்கள்!

English Summary: Petrol price crosses Rs 106: Diesel prices too Published on: 30 March 2022, 09:24 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.