மருத்துவட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு வித்திடும் அகில இந்திய அளவிலான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான முடிவுகள், அடுத்த வாரம் வெளியாக உள்ளன. இதையொட்டி தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு தேர்வுக்கான விடைக்குறிப்பு, மாணவர்களின் விடைத்தாள் நகல் ஆகியவற்றை, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்பு
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் வகை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஜூலை 17ம்தேதி
அகில இந்திய அளவில் நடத்தப்படும், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடத்தப்பட்டது. இதற்காக, நாடு முழுதும், 497 நகரங்கள், வெளிநாட்டில், 14 நகரங்களில், 3,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
விடைத்தாள்
இவற்றில், 18.72 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தேர்வுக்கான விடைக்குறிப்பு, மாணவர்களின் விடைத்தாள் நகல் ஆகியவற்றை, neet.nta.nic.in என்ற இணையதளத்தில், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
மனு அளிக்க வாய்ப்பு
விடைக்குறிப்பில் ஆட்சேபனை உள்ளவர்கள், உரிய ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதி விடைக்குறிப்பு அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்குமான தேர்வு முடிவு, மதிப்பெண் மற்றும் 'பெர்சன்டைல்' என்ற சதமான விபரங்கள், செப்டம்பர் 7ல் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
மதிப்பெண் கணக்கீடு
இதற்கிடையில், தேர்வு எழுதியுள்ள மாணவரின் இ- மெயில் முகவரிக்கு, விடைத்தாள் நகல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விடைக்குறிப்பை பார்த்து, தங்களின் மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ள முடியும்.
மேலும் படிக்க...